நேற்று நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சர் Tan See Leng மத்திய சேமநதி கழகம் குறித்து பேசினார்.
பொதுமக்களுக்கு மத்திய சேமநிதி கழகம் நியமனம் குறித்த தகவலை நினைவூட்டலாக அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது குறித்த விவரத்தை மனிதவள அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசினார்.
வரும் மே மாதம் முதல் விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும்.
அதில் அவர்களுடைய நியமனத்தை மறுபடி பார்க்கும்படி குறிப்பிட்டிருக்கும்.
ஒருவர் உயிரிழந்த பிறகு நிதியில் இருக்கும் பணம் யாருக்கு சேர வேண்டும் என்பதை நியமனம் செய்ய முடியும் என்று கூறினார்.
இந்த நியமனம் உயில் போன்றது என்று கூறினார். அதற்கு விளக்கமும் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டது.
விவாகரத்து செய்யும்போது நியமனம் மாறாது. உயில் போலவே நியமனமும் மாறாது.
விவாகரத்து செய்த பிறகு , மத்திய சேமநிதி பணத்தில் முன்னாள் வாழ்க்கைத் துணைக்கும், அந்த திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் பணத்தைத் கொடுப்பதற்கு ஒருவர் விரும்பலாம் என்று அமைச்சர் கூறினார்.
ஆகையால், மத்திய சேவை நிதி கழக நியமனத்தில் புதிதாக மாற்றம் செய்ய விரும்புவோர் புதிய நியமனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.