சிங்கப்பூர்: உலகளவில் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்த உதவும் திட்டத்திற்கு 440 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் இந்த முயற்சிக்கு தலைமை தாங்குகிறது.
தனியார் துறையின் முதலீடுகளுக்கு ஈடாக அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்க இது உதவும். புதிய நிறுவனங்களுக்கு, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் கூடுதல் நிதி உதவியாக இருக்கும்.
2017 முதல், 330 புதிய நிறுவனங்களில் மூன்று பில்லியன் வெள்ளிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியானது மற்ற நாடுகளில் ஆராய்ச்சி மேம்பாடு, சந்தை விரிவாக்கம் அல்லது காப்புரிமைக்கு உதவும்.இத்தகைய செயல்பாடுகளுக்கு அரை மில்லியன் வெள்ளி வரை தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புத்தாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
மேலும் புதுமைக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று திரு.ஹெங் குறிப்பிட்டார்.