நேற்று நாடாளுமன்றத்தில் கிருமிபரவல் காலக் கட்டத்தில் கோவிட்-19 நோயை எதிர்த்து போராடிய முன்னிலை ஊழியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
மூன்று ஆண்டு கால கோவிட்-19 காலக்கட்டத்தில் கற்றுக்கொண்டவைகளை நேற்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
நேற்று நாடாளுமன்றத்தில் கிருமி பரவல் காலக்கட்டத்தில் நோயை எதிர்த்து முன்னணியில் போராடியவர்களின் சார்பாக கலந்துக் கொண்டனர்.
மருத்துவர்,தாதியர், கல்வியாளர்,சமூகச் சேவையாளர் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் ஒரு நிமிட நேரத்துக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அதன்பின், அவர்களுக்கு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி கூறினார்.
அதன்பிறகு, நெருக்கடி நேரத்திலும் துணிவுடனும், அர்ப்பணிப்புடனும் இருந்ததை அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று ஆண்டு காலம் ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாகவும், உணர்ச்சிகரமான பயணமாகும் இருந்ததையும் நினைவூட்டினார்.