சிங்கப்பூரில் இருந்து டோகியோ நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-300ER ரக விமானத்தின் முன்பகுதியில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.இதனால் Taipei நகருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு 11.07 மணியளவில் 249 பயணிகள் மற்றும் 17 பணியாளர்களுடன் விமானம் புறப்பட்டது.
இன்று(அக்டோபர் 28) அதிகாலை அந்த விமானம் தைப்பேயில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் டோக்கியோவுக்கு விமானம் இன்றிரவு 8.30 மணியளவில் புறப்பட்டு, 12.30 மணிக்கு சென்றடையும்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.மேலும் சுமார் மணி நேர தாமதத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.