சிங்கப்பூரில் அதிகரித்துள்ள இல்லப் பணியாளர்களுக்கான வேலை!!
சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் வீட்டில் பெரியவர்களை கவனிப்பதற்காக பணியாளர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் முதியோர் பராமரிப்பு சேவைகளில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கான தேவை கடந்த 8 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அத்தகைய சேவைகளுக்கு முதலாளிகள் கூடுதலாக 30 சதவீத கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளனர்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதிப்பது முதல் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது வரை அன்றாட பணிகளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.
வீட்டுப் பணியாளர்கள் பங்கேற்கும் முதியோர் பராமரிப்புப் பயிற்சித் திட்டம் குறைந்தது 25 முதல் 30 வாரங்கள் வரை இருக்கும்.
இத்திட்டத்தை நிறைவு செய்த 300க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
இத்திட்டமானது பிலிப்பைன்ஸ், மியான்மர் போன்ற நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முதியோர் பராமரிப்பு சேவைகளில் 2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 வீட்டுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கென பயிற்சியை எடுத்துக் கொள்ளும் பொழுது பணியாளர்கள் அவர்களின் வேலையில் திறமையுடனும் ,மகிழ்ச்சியுடனும் தன் சேவையை தொடர முடிவதாக தெரிவிக்கின்றனர்.
Follow us on : click here