வியட்நாமை உருக்குலைத்த டிராமி புயல்!!
டிராமி புயல் வியட்நாமில் கரையைக் கடந்தது.
புயல் மத்திய நகரங்களான துவா தியென் ஹுவே மற்றும் டானாங் கடலோரத்தில் கரையைக் கடந்தது.
புயல் அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
புயல் கரையை கடந்தாலும் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புறங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
பெரிய நகரங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சாலைகளில் மரங்கள் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Follow us on : click here