Healthier SG திட்டத்தில் பாரம்பரியச் சீன மருத்துவம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாரம்பரிய சீன மருத்துவம் சுகாதார அமைச்சகத்தின் Healthier SG திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது.
பாரம்பரிய சீன மருத்துவர்களை அங்கீகரிப்பதற்கான கட்டமைப்பு 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் அறிவித்துள்ளார்.
ஐந்து சிங்கப்பூரர்களில் ஒருவர் பாரம்பரிய சீன மருத்துவத்தை நாடுகிறார் என்று திரு. ஓங் குறிப்பிட்டார்.
நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பாரம்பரிய சீன மருத்துவர்கள் மற்றும் மேற்கத்திய மருத்துவர்களின் பணிகளை சுகாதார அமைச்சகம் தனித்தனியாகக் குறிப்பிடுகிறது.
மேற்கத்திய மருத்துவ முறைகளுடன் இணைந்து பாரம்பரிய சீன மருத்துவ முறைகள் செயல்படும்படி திரு.ஓங் கேட்டுக்கொண்டார்.
மேற்கத்திய மருத்துவத்தால் உருவாக்கப்பட்ட தரநிலைகளின்படி பயிற்சிகள் கட்டமைக்கப்பட உள்ளதாக பாரம்பரிய சீன மருத்துவ சங்கம் கூறியது.
கூடுதலாக, பாரம்பரிய சீன மருத்துவ மாணவர்களின் மதிப்பீடும் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here