Deloitte நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் புதிதாக 3000 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் தென்கிழக்காசியாவில் வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் புதிதாக ஊழியர்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறது.
அந்நிறுவனத்தில் இப்போது சுமார் 13,000 பேர் பணிப் புரிகின்றனர்.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்கா டாலர்.
தென்கிழக்காசியா வட்டாரத்தின் டெலாய்ட் நிறுவனத்தில் புதிய தலைமை நிர்வாகியாக யூஜின் ஹோ பொறுப்பேற்க உள்ளார்.
அறிவிக்கப்படும் வேலைகளுக்கு கணக்கு,பொறியியல்,வணிகம் போன்ற எல்லாவித துறைகளில் படித்தவர்களை வேலைக்கு எடுக்க தயாராக உள்ளதாக கூறினார்.
அதே போல் உளவியல் படித்தவர்கள் கூட அவர்கள் அறிவிக்கும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்காலம் என்று கூறினார்.
திறமை கொண்டவர்களை ஈர்த்து அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கவும் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
கிட்டத்தட்ட 100,000 நிதி,கணக்கியல் நிபுணர்கள் தற்போது சிங்கப்பூரில் இருக்கின்றனர்.
வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் புதிதாக 7,000 வேலைகள் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.