இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில் சட்டவிரோதமாக தங்கிய சிங்கப்பூரர்!!
சிங்கப்பூர்:இந்தோனேசியாவின் பாத்தாம் தீவுக்கு 2021ஆம் ஆண்டு சட்டவிரோதமாகச் சென்று அங்கு தங்கியிருந்த சிங்கப்பூரர் ஒருவருக்கு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2021 இல், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இருந்து படகில் புறப்பட்டு, பத்துவம்பார் துறைமுகம் வழியாக ஃபைசல் பாத்தாம் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார்.
இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஃபைசல் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஃபைசல் பாத்தாமில் தங்கியிருந்த காலத்தில் இடம் விட்டு இடம் மாறியதாக கூறப்படுகிறது
38 வயதான நூர் ஃபைசல் ஷாவுக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டக்லஸ் நப்பித்துப்புலு, “பிரதிவாதியின் செயல்களை நியாயப்படுத்த முடியாது”என்று கூறினார்.
ஃபைசல் நல்ல நடத்தை உடையவர் என்றும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் நீதிபதி டக்லஸ் சுட்டிக் காட்டினார்.
இந்தோனேசியாவை நேசிப்பதாகவும், இந்தோனேசிய குடிமகனாக விரும்புவதாகவும் ஃபைசல் கூறினார்.
இந்தோனேசிய தேசிய கீதத்தை பாடி உறுதிமொழி ஏற்கும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
நீதிபதிகள் கூறியபடி அவரால் அவை இரண்டையும் செய்ய முடிந்தது.
அப்போது நீதிபதி டக்லஸ், ஃபைசல் இந்தோனேசியக் குடிமகனாவதற்கு உதவுமாறு அரசுத் தரப்பிடம் கேட்டுக் கொண்டார்.
ஐந்து மாத சிறைத்தண்டனையுடன் கூடுதலாக 25 மில்லியன் ரூப்பியா (S$2,100) அபராதம் செலுத்தவும் ஃபைசலுக்கு உத்தரவிடப்பட்டது.
அபராதம் செலுத்தத் தவறினால், அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0