அமெரிக்காவில் McDonald’s பர்கரைச் சாப்பிட்ட 75 பேருக்கு உடல்நலக்கோளாறு!!

அமெரிக்காவில் McDonald's பர்கரைச் சாப்பிட்ட 75 பேருக்கு உடல்நலக்கோளாறு!!

அமெரிக்காவில் McDonald’s Quarter Pounder பர்கரை சாப்பிட்ட 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

அவர்களில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானோர் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கொலாராடோவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

குவார்ட்டர் பவுண்டர் பர்கரில் மாட்டிறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் ஈ.கோலை பாக்டீரியா இருப்பதாக நம்பப்படுகிறது.

குறிப்பாக எந்த உணவு பொருட்களில் பாக்டீரியா இருந்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

தற்போது, ​13 மாநிலங்களில் உள்ள மெக்டொனால்டு கடைகள் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை நிறுத்தியுள்ளன.

வெங்காயத் துண்டுகளை கிளைகளுக்கு விநியோகிக்கும் டெய்லர் ஃபார்ம்ஸ் அதன் வெங்காயத்தை மீட்டெடுத்துள்ளது.

McDonald’s வாடிக்கையாளர்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி, அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.