பிலிப்பைன்ஸ் நாட்டை கலங்கவிட்ட டிராமி புயல்..!! பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டை கலங்கவிட்ட டிராமி புயல்..!! பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு...!!!

புயல்கள் மற்றும் கடுமையான வானிலை பிலிப்பைன்ஸில் பொதுவானது என்றாலும் டிராமி சூறாவளி வழக்கத்தை விட கடுமையாக இருந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரமாண்டமான Luzon தீவின் பல மாநிலங்களில் இரண்டு மாத மழை இரண்டே நாட்களில் பெய்தது.

புயலில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிவாரணப் பணிகளில் ஈடுபட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டுள்ளார்.

மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய புயல் வியட்நாமை நோக்கி நகர்கிறது.

இருப்பினும், இது மீண்டும் பிலிப்பைன்ஸுக்கு வரலாம் என வானிலை ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

தென் சீனக் கடலில் பலத்த காற்று வீசுவதால், அது பிலிப்பைன்ஸ் நோக்கித் தள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.