சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கவுள்ள புதிய செயலி!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மாணவர்களின் Chromebook, iPad சாதனங்களை நிர்வகிக்க கல்வி அமைச்சகம் புதிய பயன்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.
பயன்பாடுகள் Chromebook சாதனங்களுக்கு நவம்பர் மாதமும், iPad சாதனங்களுக்கு அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதமும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chromebook சாதனங்களில் Lightspeed Systems பயன்பாட்டை நிறுவும் பெற்றோர்களும் மாணவர்களும் கூடுதலாக எதுவும் செய்ய வேண்டியதில்லை.
iPad சாதனங்களில் Jamf ஐ நிறுவ மாணவர்கள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விண்டோஸ் சாதனங்களில் Blocksi என்ற ஆப்ஸ் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்று கூறியது.
முன்னதாக பயன்படுத்தப்பட்ட மொபைல் கார்டியன் சாதன மேலாண்மை செயலியை இனி பயன்படுத்த மாட்டோம் என்று அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
உலகளாவிய ரீதியில் செயலியில் உள்ள மாணவர்களின் சாதனங்களில் சைபர் பாதுகாப்பு மீறல்கள் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இணைய பாதுகாப்பு மீறலால் 26 பள்ளிகளைச் சேர்ந்த 13,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இணைய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg