வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறை இனி இல்லையா?! சிங்கப்பூரில் ஓர் நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

Grab நிறுவனம் அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.

வேலை பார்க்கும் 5 நாட்களும் இனி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

அக்டோபர் 24 ஆம் தேதி(இன்று) நடந்த ஊழியர் கூட்டத்தில் அது தெரிவித்தது.

இந்த புதிய மாற்றம் டிசம்பர் 2 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என பெயர் குறிப்பிட விரும்பாத சில ஊழியர்கள் தெரிவித்தனர்.

கோவிட் 19 காலக்கட்டத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஏற்பாட்டை பல நிறுவனங்கள் தொடங்கியது.

கிருமி தொற்று காலம் முடிந்து ஈராண்டு ஆகிறது.

பல நிறுவனங்கள் வேலை பார்க்கும் ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டு வர முன்வருகின்றனர்.

இந்த புதிய ஏற்பாடு அலுவலகத்தில் ஊழியர்கள் வேலைப் பார்ப்பதால் ஒருவரோடு ஒருவர் பேசி பழகுவதையும் ஊக்குவிக்கவும்,ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் உதவும் என்று நம்புவதாக Grab கூறியது.