உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள 56 அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் நீலநிறத்தில் பிரகாசிக்க உள்ளன.
மார்ச் 19-ஆம் தேதி (இன்று) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை ஒளியூட்டப்படும்.
மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும்.
`City Turns Blue´ எனும் திட்டத்தின்கீழ் நீல நிறத்தில் ஒளியூட்டப்படும்.
இத்திட்டம் பொதுப் பயனீட்டுக் கழகம் எனும் PUB கழகத்தின் திட்டமாகும்.
தண்ணீர் சேமிப்பு முயற்சிகளில் உள்ளூர் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த மாதம் முழுவதும் #GoBlue4SG எனும் இயக்கம் மூலமாக பொதுப் பயனீட்டுக் கழகம் முயற்சி செய்து வருகிறது.
அதோடு சிங்கப்பூரில் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வையும் அதிகரிக்கும் முயற்சிகளிலும் அமைப்புகள் ஈடுப்பட்டு வருகிறது.