பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது…!!!

பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது...!!!

சீனாவைச் சேர்ந்த ஸி என்ற பெண்ணிடம் தாய்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் சீனாவில் 1.5 மில்லியன் யுவான் (US$210,000) வரை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

30 வயதான ஸி முகமூடியால் முகத்தை மூடிக்கொண்டு பேங்காங்கில் சுற்றி வந்தார்.

அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உள்ளூர் வாசிகள் அவர் சட்டவிரோதமாக குடியேறியவராக இருக்கலாம் என சந்தேகமடைந்து குடிவரவு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

ஸியின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அவர் 2022 ஆம் ஆண்டு 15 நாள் விசாவில் தாய்லாந்திற்குள் நுழைந்ததைக் கண்டுபிடித்தனர்.

ஆனால் அவர் தாய்லாந்தில் 650 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணையில் அவர் இன்டர்போல் பட்டியலில் இருப்பது தெரியவந்தது.

2016 மற்றும் 2019 க்கு இடையில்,பெரிய விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 பேரை ஏமாற்றியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை 1.5 மில்லியன் யுவான் என தெரிவிக்கப்பட்டது.

அந்த பணத்தை பயன்படுத்தி அவர் முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தாய்லாந்துக்கு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்லாந்தில் அதிக காலம் தங்கியதற்காக சி தண்டிக்கப்படுவார் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பிறகு, அவர் தனது தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.