பக்கவாத நோயாளிகளுக்காக அறிமுகப்படுத்தப்படும் உடற்பயிற்சி கூடங்கள்..!!!

பக்கவாத நோயாளிகளுக்காக அறிமுகப்படுத்தப்படும் உடற்பயிற்சி கூடங்கள்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கருத்தில் கொண்டு உடற்பயிற்சிக் கூடங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பக்கவாதம் ஆதரவு மையம் எனும் இலாப நோக்கற்ற அமைப்பானது, அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

உடற்பயிற்சி கூடங்கள் 12 வார உடற்பயிற்சி திட்டங்களை வழங்குகின்றன.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் நலத்திற்கான பொறுப்பை ஏற்று படிப்படியாக தாங்களாகவே உடற்பயிற்சி செய்ய உதவுவதே திட்டத்தின் நோக்கமாகும்.

உலக பக்கவாதம் தினத்தை முன்னிட்டு இன்று பக்கவாதம் ஆதரவு நிலையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறினார்.

2011 ஆம் ஆண்டில் 6,100 நபர்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டனர்.

அதுவே 2021ல் 9,600 நபர்களாக அதிகரித்தது.

அதனைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்துள்ளார்.