சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் முழுமையாக அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் முழுமையாக அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் சோதனைச் சாவடியைக் கடக்கும் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் இல்லாமல் சோதனை கடக்கும் முறை கடந்த மாத இறுதியில் இருந்து 4 டெர்மினல்களிலும் நடைமுறையில் இருக்கிறது.

சோதனை முகப்புகளைச் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் மற்றும் சிங்கப்பூருக்கு வரும் சிங்கப்பூரர்கள் முக அடையாள,கருவிழித் திரைப்படல அடையாள முறைகளைப் பயன்படுத்தி கடந்து செல்லலாம்.சோதனை சாவடியைக் கடக்க பாஸ்போர்ட் தேவையில்லை.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் பாஸ்போர்ட் இல்லாமல் சோதனைச் சாவடியைக் கடக்கலாம்.

இந்த மாதம் 15 ஆம் தேதி நிலவரப்படி ஏறக்குறைய 1.5 மில்லியன் பயணிகள் பாஸ்போர்ட் காட்டாமல் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.