சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பலி!!

சிங்கப்பூர் : அக்டோபர் 21-ஆம் தேதி மாலை யீஷின் ரிங் ரோட்டில் பிளாக் 413 அருகே உள்ள கட்டுமானத் தளத்தில் விபத்து நேர்ந்துள்ளது.இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் உயிரிழந்தார்.

கட்டுமான தளத்தில் இரும்பு கம்பியை தள்ளும் போது அவர் மீது விழுந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியது.

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

கட்டுமான தளத்தில் அத்தகைய எஃது சட்டங்களை நகர்த்தும் போது நிலையானதாக வைத்திருக்க பொருத்தமான கருவிகள் வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் ஊழியர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஊழியர் Jin Shan Construction நிறுவனத்தில் பணி புரிந்தார்.நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் தற்போது நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.