சிங்கப்பூரில் உள்ள கடைகளில் திருடியதாக 19 நபர்கள் மீது குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து மது பாட்டில்கள், அழகு சாதனப் பொருட்கள், காலணிகள், மின்சாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பைகள் உள்ளிட்டவை திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு சம்பவத்திலும் திருடப்பட்ட சில பொருட்களின் மதிப்பு 35 வெள்ளி முதல் 685 வெள்ளி வரை இருக்கும்.
இச்சம்பவத்தின் தொடர்பில் கடைகளில் திருடியதாக 19 பேர் மீது சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் சிலர் பல திருட்டுகளை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் 23 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அறியப்படுகிறது.
அவர்கள் மீது இன்று முதல் நாளை வரை பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0