போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா…!!!

போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய இரண்டு சோதனைகளில் 6 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சோதனையிடப்பட்டதில் வேறு சில போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்த போதை பொருட்களின் மதிப்பு சுமார் 320,000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு சுமார் 1,300 போதை அடிமையாளர்கள் எடுத்துக் கொள்ளும் அளவு என்று கூறப்பட்டது.

போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் 24 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேலும் இச்சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் 500 கிராமுக்கு அதிகமாக கஞ்சா கடத்துபவர்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது.