அமெரிக்காவில் மெக்டொனால்ட் பர்கரைச் சாப்பிட்டவர் உயிரிழப்பு...!!!
அமெரிக்காவில் மெக்டொனால்டு பர்கர் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பர்கரை சாப்பிட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலாராடோ மற்றும் நெப்ராஸ்கா உட்பட 10 மாநிலங்களில் பர்கர் சாப்பிட்டு 49 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
உணவகங்களில் விற்கப்படும் குவார்ட்டர் பவுண்டர் பர்கர்கள் மாட்டிறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் ஈ.கோலை பாக்டீரியாவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக, எந்த பொருளில் பாக்டீரியா உள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தற்போது, பாதிக்கப்பட்ட சில மாநிலங்களில் உள்ள மெக்டொனால்டு கிளைகள் மாட்டிறைச்சி மற்றும் வெங்காயத் துண்டுகளை அகற்றியுள்ளன.
குவார்ட்டர் பவுண்டர் பர்கர் சில கிளைகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈ கோலை இயற்கையாகவே மனிதர்களின் குடலில் உள்ளது.
இது பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
சில வகையான பாக்டீரியாக்கள் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்ட நபர்கள் பொதுவாக 7 நாட்களுக்குள் குணமடைவார்கள்.
அவர்களின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
மெக்டொனால்டு வாடிக்கையாளர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0