சிங்கப்பூரில் குடும்ப நீதிமன்றத்தில் புதிய முறை அறிமுகம்!!

சிங்கப்பூரில் குடும்ப நீதிமன்றத்தில் புதிய முறை அறிமுகம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து கோரிய தரப்பினருக்கு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவாகரத்தில் இணக்கமாக இருப்பதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் இதில் அடங்கும்.

குடும்பநல நீதிமன்றம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது.

அதன்படி இந்த புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீதி மன்றம் ஒரு சிகிச்சை அணுகுமுறையுடன் தொடங்குகிறது.

சட்டத்தின் கட்டமைப்பின் கீழ், சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஒரு நீதிபதி தலைமையில் அதற்கான தீர்வு காண்பர்.

இந்த புதிய முயற்சியை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் வரவேற்பதாக கூறினார்.

சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், கஷ்டங்களை கடந்து வருவதற்கும் தேவையான நீதி வழங்குவதில் இந்த புதிய முயற்சி உள்ளடங்கும் என்று கூறப்பட்டது.