Tamil Sports News Online

வரும் மார்ச் -20 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் திட்டம்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் Travel Smart Journeys எனும் மறுஆய்வுக்காக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த திட்டம் மீண்டும் தொடங்க உள்ளது.ரயிலுக்குப் பதிலாகப் பேருந்தில் காலை நேரத்தில் பயணம் செல்லும் பயணிகளுக்குச் சலுகை தரும் திட்டமாகும்.

வார நாட்களில் காலை நேரத்தில் பேருந்தில் செல்லும் வடகிழக்குப் பாதை ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்குச் சலுகை வழங்கப்படும்.

வரும் மார்ச் 20-ஆம் தேதி மீண்டும் திட்டம் தொடங்க உள்ளது.மேலும் 5 பேருந்துச் சேவைகளை புதுப்பிக்கப்பட்டுள்ள திட்டத்தில் உள்ளடக்கும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.

பொங்கோல்,செங்காங், புவாங்கோக், ஹவ்காங் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவைகள் இயங்கின்றது.

43e எண் சேவையுடன் City Direct சேவைகளான 654,660,666,671,672 முதலிய சேவைகளுடன் இணைக்கப்பட உள்ளது.

இதனை வைத்துப் பேருந்து கட்டணத்தில் பாதி குறையலாம்.

சலுகைத் திட்டத்தின் நோக்கமானது காலை நேரத்தில் நெரிசலைத் தவிர்ப்பதற்கு பயணிகளின் எண்ணிக்கையைக் குறைத்து சுமுகமான பயணத்தை தருவதே.