ஒரு சில நாடுகள் தங்களுடைய அரசாங்க கைத்தொலைப்பேசிகளில் Tiktok செயலியைத் தடைச் செய்துள்ளது.
அமெரிக்கா,நியூஸிலாந்து,பிரிட்டன்,ஐரோப்பா ஒன்றியம், பெல்ஜியம் ஆகிய நாடுகள் அரசாங்க கைத்தொலைப்பேசிகளில் தடைச் செய்துள்ளன.
டிக்டாக் செயலி மீது அதிகமான நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில் smart nation and digital government office எனும் சிங்கப்பூர் அறிவார்ந்த தேச,மின்னிலக்க அரசாங்க அலுவலகம் தேவையின் அடிப்படையில் அரசாங்க சார்ந்த சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு smart nation கூறியது.
அரசாங்க சார்ந்த சாதனங்களில் வேலைக்கு மட்டுமே செயலி பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் இருக்கிறது.
ஏற்கனவே பாதுகாப்பு அம்சங்கள் அரசாங்கம் சார்ந்த சாதனங்களில் தரவுகளை பாதுகாக்கப்பதற்கு உள்ளதாகவும் தெரிவித்தது.
டிக்டாக் கணக்குகளை துணைப் பிரதமர் Lawerence Wong, சுகாதார அமைச்சர் Ong ye kung உள்ளிட்ட அமைச்சர்கள் வைத்திருக்கிறார்கள்.