இனி குழந்தைகளும் தனிப்பட்ட வங்கி கணக்குகளை திறக்கலாம்…!!!

இனி குழந்தைகளும் தனிப்பட்ட வங்கி கணக்குகளை திறக்கலாம்...!!!

சிங்கப்பூர்:குழந்தைகளுக்கான தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் வங்கிகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் அவர்கள் மோசடிகளுக்கு இரையாகாமல் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இன்றைய இளைஞர்களிடம் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாக வங்கித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை 7 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் தற்பொழுது திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

OCBC MyOwn கணக்கு மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான டெபிட் கார்டுகளைப் பெறலாம்.

மேலும் அந்த அட்டையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்.

UOB வங்கி சமூகப் பட்டறைகள் மூலம் அடிப்படை பண மேலாண்மை பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறது.

DBS வங்கி சுமார் 100 பள்ளிகளில் நிதிக் கல்வித் திட்டங்களை நடத்துகிறது.

சிறுவயதிலிருந்தே நிதி கல்வி திட்டங்களை கற்பிக்கும் பொழுது அவர்களுக்கு பணத்தின் மீதான பொறுப்பு மற்றும் அக்கறை உருவாகிறது.

இதன் மூலம் அவர்கள் பிற்காலத்தில் நிதி நிலைமையை எளிதில் சமாளிக்க கூடிய திறமையை பெற முடியும் என நம்பப்படுகிறது.