சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!!

சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!!

புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையே உள்ள shell நிறுவனத்தின் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு நேற்று (அக்டோபர் 21) அதிகாலை 5.30 மணிக்கு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் கூறியது.

கசிவு ஏற்பட்ட இடத்தில் அது நின்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கசிந்த எண்ணெய் படலங்களைச் சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இச்சம்பவம் குறித்து அரசாங்க அமைப்புகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.நேற்றைய மாலை 6 மணி நிலவரப்படி புதிய எண்ணெய் படலங்கள் தென்படவில்லை.
ஆளில்லா வானுர்திகள் மற்றும் செயற்கைக்கோள்கள் எண்ணெய் படலங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டது.