மருத்துவமனைக்கு கழுத்தில் பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு..!!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆடவர் ஒருவர் தனது கழுத்தில் பாம்பை தொங்கவிட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான காணொளியில் அவரின் வினோத செயல் இணையத்தில் வெளியானது.இச்சம்பவம் பகல்பூர் நகரில் நடந்துள்ளது.

அதில் பரபரப்பான மருத்துவமனையில் மிகவும் சாதாரணமாக அந்த ஆடவர் தனது கழுத்தை சுற்றி நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பை தொங்கவிட்டு வருவதையும், அதைக் கண்டு எதிரில் வருவோர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது.

வேட்டியும் பணியனும் அணிந்திருந்த அவரின் கையில் கட்டும் இருந்தது.அவர் கழுத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த Russell’s Viber எனும் பாம்பு இருந்தது.

அவர் பாம்பின் வாயை கெட்டியாக பிடித்தபடி நடந்து வருகிறார்.

மருத்துவர்கள் பலமுறை கூறிய பிறகே அவர் அந்த பாம்பின் பிடியை விட்டதாக கூறப்படுகிறது.அந்தப் பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது.மருத்துவமனையில் அந்த ஆடவருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.