ஜப்பானின் உயிரியல் பூங்காவில் குரங்குகளின் உணவை திருடிய நபர்..!!!

ஜப்பானின் உயிரியல் பூங்காவில் குரங்குகளின் உணவை திருடிய நபர்..!!!

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள தெனொஜி உயிரியல் பூங்காவில் உணவுப் பொருட்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேக நபர் பிடிபட்டார்.

புகழ்பெற்ற தேனோஜி விலங்கியல் பூங்காவில் 1,000க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.

சுமார் 170 வகையான விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் 47 வயதுடைய நபர் மீது சந்தேகம் எழுந்தது.

குரங்குகள் மற்றும் சிம்பன்சிகளுக்கு வழங்கும் உணவை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அக்டோபர் 1ஆம் தேதி எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபர் எதற்காக விலங்குகளுக்கு வைக்கப்பட்ட உணவைத் திருடினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த நபர் திருடப்பட்ட உணவை மறு விற்பனை செய்ய திட்டமிட்டாரா…??

பாவம் குரங்குகள்… என்பன போன்ற பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விலங்கு ஆர்வலர்கள் இத்தகைய செயலுக்கு தங்களின் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.