கிளாஸ் 3 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸை கிளாஸ் 4 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது எப்படி?
சிங்கப்பூருக்கு எப்படியாவது செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உள்ளனர் .அங்கு சென்றவுடன் அடுத்ததாக நமது திறமைகளை உயர்த்த அல்லது வேலை உயர்வு பெற ஏதேனும் கோர்ஸ் படிப்பது அல்லது டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது உள்ளிட்டவைகளை எடுக்க நினைப்பார்கள்.அதே போல் கிளாஸ் 3 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுத்த பிறகு கிளாஸ் 4 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது எப்படி என்பது ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கும் . இது அவர்களுக்கானது.
சிங்கப்பூரில் அவ்வப்போது விதிமுறைகள் மாற்றம் செய்யப்படும்.நீங்கள் கிளாஸ் 3 லைசென்ஸை கிளாஸ் 4 லைசென்ஸாக மாற்றுவதற்கு கம்பெனி லெட்டர் தேவை என்ற விதிமுறை இருந்தது. அதை தற்போது விலக்கப்பட்டு ,கம்பெனி லெட்டர் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. கம்பெனி லெட்டர் தேவையில்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் ஒரு நாளைக்கு சுமார் 500 க்கும் அதிகமானோர் டிரைவிங் சென்டரை அணுகினர்.ஒரு நாளைக்கு குறைந்தது 40 பேருக்கு மட்டுமே அட்மிஷன் போடப்படும்.ஆனால் அதிகமானோர் வந்ததால் சமாளிக்க முடியாத நிலை வந்தது.
அதனால் கிளாஸ் 3 லைசென்ஸை கிளாஸ் 4 லைசென்ஸாக மாற்ற கம்பெனி லெட்டர் தேவை என்பதை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
நீங்கள் வேலை செய்யும் கம்பெனி உங்களுக்கு தரும் approved லெட்டர் கம்பெனி லெட்டர் எனப்படும்.
கம்பெனி லெட்டர் முறை எவ்வாறு இருக்க வேண்டும்?
Date :
Our Ref no :
Traffic Police
(Driving Test Centre Address)
Respected Sir,
Sub : APPLY OF CLASS 4 DRIVING COURSE – reg
Worker Name :
Fin no :
The above named is an employee of our company with class 3 driving license.With our company support,he would be applying for his class 4 driving course at driving centre.
We would appreciate if you could endorse or support his application.
Yours Faithfully,
Name
Designation :
Signature
Company Stamp :
இவ்வாறு உங்களுடைய கம்பெனி லெட்டர் இருக்க வேண்டும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg