சிங்கப்பூரில் மீண்டும் நோன்புப் பெருநாள் சந்தை கம்போங் கிளாமில் தொடங்கி உள்ளது.இந்த சந்தை நேற்று முன்தினம் மார்ச் 15-ஆம் தேதி தொடங்கியது.அடுத்த மாதம் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை செயல்படும் என்றனர்.
இந்த சந்தை ஆண்டுதோறும் கம்போங் கிளாம் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஏற்பாடை சிங்கப்பூர் பயணத்துறை கழகத்துடன் இணைந்து செய்துள்ளது.அந்த சந்தையில் கடைகளின் உரிமையாளர்கள் முஸ்லீம்களாக இருப்பர்.
அல்லது செயல்படும் அனைத்து பான- உணவுக் கடைகளும் ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ள கடைகளாக இருக்கும்.
உட்கார இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.பக்தாத் தெருவில் உள்ள கார் நிறுத்துமிடம் அருகே இடம் அமைக்கப்பட்டுள்ளது.
நேரடிப் பயிலரங்குகளையும், நடவடிக்கைகளையும் அந்த இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.இசை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.