தொழிற்சார்ந்த நோய்களில் ஊழியர்களை அதிகம் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனை…!!!

தொழிற்சார்ந்த நோய்களில் ஊழியர்களை அதிகம் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனை...!!!

சிங்கப்பூர்: உலகெங்கிலும் தொழில்ச் சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்படுவது உண்டு. ஊழியர்கள் அவர்கள் செய்யும் வேலையை பொறுத்து அந்த நோயின் தாக்கம் இருக்கும்.

அந்த வகையில் சிங்கப்பூரில் சத்தத்தால் ஏற்படும் செவித்திறன் இழப்பு பிரச்சனை ஆனது தொழில் சார்ந்த நோய்களில் முன்னணியில் உள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலோக வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகம் இருப்பதாக உற்பத்தித்துறை கூறியது.

பணியிடங்களில் இரைச்சல் அளவைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறது.

இதற்கானத் திட்டம் 2021 முதல் நடைமுறையில் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒலியளவைக் குறைக்க தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பணியிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க முடியும் என்று மனிதவள அமைச்சகம் நம்புகிறது.

இதனால் ஊழியர்களின் பாதுகாப்பும் வேலை இடங்களில் உறுதி செய்யப்படும் என்று கூறியது.