முன்னோடி திட்டம் ஒன்று கல்வி பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வேலையிட பயிற்சிகளைப் பெற வழி அமைக்க உள்ளது.அந்த திட்டத்தை 7 பள்ளிகளில் சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது.
அந்த திட்டத்தை STEM என்று அழைக்கப்படும்.STEM அறிவியல், தொழில்நுட்பம்,பொறியியல், கணிதம் முதலியவற்றைக் குறிக்கிறது.
ஏறக்குறைய 130 மாணவர்களுக்கு இந்த மூவாண்டு திட்டம் ஆதரவளிக்கிறது.இதில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் பெண்கள்.
மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் போன்ற துறைகளில் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும்.
அதோடு அவர்கள் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சிக்கு செல்லவும் வாய்ப்பளிக்கப்படும் என்றனர்.
இந்தத் திட்டத்தை கிழக்கு வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளில் பயிலும் உயர்நிலை மூன்றாம் நிலை மாணவர்களிடம் இருந்து தொடங்க உள்ளதாக தெரிவித்தது.
இந்தத் திட்டம் மாணவர்களை உயர்கல்வி நிலையங்களுடன் இணைக்கிறது.இந்த திட்டம் தேசிய கல்வி கழகம்,துமாசிக் அறக்கட்டளை ஆகிய இரண்டும் இணைந்து கூட்டு முயற்சியும் உருவாக்கப்பட்டது.
வருங்காலத்தில் மற்ற பள்ளிகளில் இருந்து இத்திட்டத்தில் மாணவர்களை எப்படி சேர்க்கலாம் என்றும் கழகம் ஆராய உள்ளதாகவும் தெரிவித்தது.