NTUC Income-Allianz ஒப்பந்தம் ரத்து!!

NTUC Income-Allianz ஒப்பந்தம் ரத்து!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் NTUC Income-Allianz ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில் தொழிற்சங்கத் தலைவர்கள் மத்தியில் கவலை இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.

ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து தொழிற்சங்கம் மற்றும் தலைவர்கள் கவலை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் மற்றும் இரண்டாவது நிதியமைச்சர் சீ ஹொங் டாட் ஆகியோர் நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு பங்குதாரர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக திரு இங் கூறினார்.

இது ஒரு திறந்த மற்றும் ஆக்கபூர்வமான விவாதமாக இருந்ததாக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலாளர் சங்கம் என்பது சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்,சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் ஒரு தளமாக இருக்கிறது என திரு. இங் குறிப்பிட்டார்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அரசாங்கத்தின் முடிவை மதிப்பதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.