நடுகடலில் 10 வாரம் சிக்கி தவித்தவர்கள்!! ஒருவர் மீட்பு!! இருவர் பலி!!

நடுகடலில் 10 வாரம் சிக்கி தவித்தவர்கள்!! ஒருவர் மீட்பு!! இருவர் பலி!!

நடுக்கடலில் சுமார் 10 வாரம் சிக்கித் தவித்த ரஷ்யா நபர் மீட்கப்பட்டுள்ளார்.மிக்கேல் பிச்சுகின் என்ற நபர் அவரது சகோதரர் மற்றும் மகனுடன் சேர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி படகில் பயணம் செய்தனர்.

ஆனால் சில நாட்களில் அவர்களிடம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏன் எதனால் என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை.

அவர்களிடம் இரண்டு வாரத்துக்கு தேவையான உணவு மட்டுமே இருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

67 நாட்கள் ஓடின.அக்டோபர் 14-ஆம் தேதி மீனவர் ஒருவர் அந்த படகைக் கண்டார்.மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்றபோது பிச்சுகின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது.

அவரது மகன் மற்றும் சகோதரர் உயிரிழந்து விட்டதாக CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிச்சுகின் உடல் பருமன் என்பதால் அவர் உயிர் பிழைத்ததற்காக காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தில் கடல் போக்குவரத்து விதிகளை மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது.

கிழக்காசியாவில் மிகக் குளிரான கடல் என்று கருதப்படும் Okhotsk கடலில் படகில் பயணம் மேற்கொண்டனர்.