சிங்கப்பூர் : காற்று அல்லது வெப்பநிலை அதிகமாக இருந்தால் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

காற்று அல்லது வெப்பநிலை அதிகமாக உயர்ந்தால் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்று மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamad பதில் அளித்துள்ளார்.

மோசமான வானிலை நிலவும் சமயத்தில் வேலையிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒரே ஒரு வழிகாட்டி பொருந்தாது என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

மாறாக,நிறுவனங்கள் தாங்களாகவே நிலைமையை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

வேலையிடங்களில் அதிக வெப்பத்தை சமாளிப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள்,காலநிலை கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் வானிலைக்கு தகுந்த ஆலோசனைகள் உள்ளன என்று கூறினார்.

ஊழியர்கள் வேலையிடங்களில் பாதுகாப்பு இல்லை என்று கருதினால் SnapSAFE மூலம் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.