கென்யாவின் முவீ பகுதியில் இருந்த 50 யானைகளை இடமாற்றும் வனவிலங்கு குழுவினர்…!!!

கென்யாவின் முவீ பகுதியில் இருந்த 50 யானைகளை இடமாற்றும் வனவிலங்கு குழுவினர்...!!!

கென்யாவின் வனத்துறை அதிகாரிகள் ஒரு மகத்தான பணியை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் நெரிசலான முவீ இயற்கை பாதுகாப்பு பகுதியில் இருந்து 50 யானைகளை இடமாற்றம் செய்து வருகின்றனர்.

அவை பரந்த அபர்டெர் தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

முவீ இயற்கை பாதுகாப்பு பகுதி இடம் முதலில் 50 யானைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது.

ஆனால் யானைகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்ததால் இட நெருக்கடியைச் சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட வனவிலங்கு நிபுணர்கள் குழு இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள், லாரிகள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் யானைகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

யானைகளுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.

பின்னர் அவை பத்திரமாக லாரிகளில் ஏற்றி புதிய இடத்திற்கு அனுப்பப்படுகின்றன.