சிங்கப்பூரில் இனி , மருந்து பொருட்களையும் சேமித்து வைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்று வர்த்தகத் தொழில் அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் Gabriel Lim கூறினார்.
தற்போது உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது போல் இதனையும் சேகரித்து வைக்க உள்ளது. அரசாங்கம் தற்போது அரிசி போன்ற அடிப்படைத் தேவை பொருட்களைச் சேமித்து வைத்துள்ளது.
இதே போல் வேறு எந்ததெந்த பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்று ஆராய்வதாகவும் கூறினார். முக கவசம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பது அவசியமாகலாம் என்றும் கூறினார்.
தேவைப்படும் அடிப்படை பொருட்கள் மருத்துவ பராமரிப்பு நிலையங்களில் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் கூறினார்.
எப்போழுதும் போதுமான அளவு அடிப்படை பொருட்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் மூன்று அம்ச அணுகுமுறையைப் பின்பற்றுகிறதாகவும் கூறினார்.
முதல் இரண்டு அம்சங்களானது, ஏற்றுமதி இறக்குமதி சந்தைகள் விரிவாக இருப்பதும், உள்ளூர் விற்பனையைப் பெருக்குவதும். மூன்றாவது அம்சமாக பொருட்களைச் சேமித்து வைப்பது என்றார்.