கட்டுமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள்…!!!

கட்டுமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து அதிகாரசபையின் பணியிடங்களில் சமீபகாலமாக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சீ ஹாங் டாட், கட்டுமானத் தளங்களில் பணியிடப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.

எடுத்துக்காட்டாக,அதிகாரசபை அதன் குத்தகைதாரர்களுக்கு கட்டாய பாதுகாப்பு பயிற்சி அளிக்கிறது.

மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வபோது திடீர் சோதனையும் நடத்தப்படுகிறது என்று கூறினார்.

இந்த ஆண்டு (2024) ஜூலையில் ஜீரோ-விபத்து செயல் திட்டம் 2.0 அதாவது ZAP 2.0 ஐ ஆணையம் அறிமுகப்படுத்தியது.

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குத்தகைதாரர்களுடன் அதிகாரசபை தொடர்ந்து பணியாற்றும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் யிக் சாய் கமிஷனின் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குத்தகைதாரர்கள் மற்றும் துணை குத்தகைதாரர்களுடன் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கேட்டார்.

செப்டம்பர் 17 ஆம் தேதி, லெந்தோர் அவென்யூ வடக்கு-தெற்கு சாலையின் கட்டுமான தளத்தில் 2 தொழிலாளர்கள் கனரக இயந்திரங்களில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை கூறினார்.

இந்தச் சம்பவத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சீ ஹாங் டாட், எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

21.5 கிமீ வடக்கு-தெற்கு பாதை 2027 இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.