“ஊழல் ஒழிப்புச் சட்டங்களில் மாற்றங்கள் தேவையில்லை”- திரு.சான் சுன் சிங் 

"ஊழல் ஒழிப்புச் சட்டங்களில் மாற்றங்கள் தேவையில்லை"- திரு.சான் சுன் சிங் 

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் தற்போதைய ஊழல் தடுப்புச் சட்டங்களில் மாற்றம் தேவையில்லை என்று அரசு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.

நாட்டில் எவ்வளவு தான் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு தான் என்று கூறினார்.

தவறு நடந்தால் சட்டங்களை மாற்ற அவசரப்பட்டு முடிவெடுக்கத் தேவையில்லை என்று திரு.சான் கூறினார்.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.அவற்றில் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

செப்டம்பரில் நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையின் முதல் நாளில், இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளும் தண்டனைச் சட்டத்தின் 165 வது பிரிவின் கீழ் குறைந்த குற்றச்சாட்டுகளாக திருத்தப்பட்டன.

ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பலவீனமாக இருப்பதால் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டதா என்று தொழிலாளர் கட்சித் தலைவர் சில்வியா லிம் கேட்டார்.

பரிவர்த்தனைகளில் இரண்டு முதன்மை தரப்பினர் இருப்பதால், பரிவர்த்தனைகளில் ஊழலை மறுப்பதில் இருவரும் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், விசாரணையில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அவற்றை நிரூபிப்பதில் உள்ள வழக்கு அபாயங்களைக் கருத்தில் கொண்டு, குற்றச்சாட்டுகளை திருத்தியதாக AGC கூறியது.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது குற்றச்சாட்டுகள் திருத்தப்படுவது இயல்பு என்று திரு.சான் கூறினார்.