HDB அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் பூசும் பணியின் போது ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!!

HDB அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் பூசும் பணியின் போது ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஃபேரர் பார்க் பகுதியில் உள்ள மாநகராட்சித் தொகுதியில் வர்ணம் பூசும் பணியின் போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) ஃபேரர் பார்க் சாலையில் உள்ள பிளாக் 15ல் உள்ள 30வது மாடி வீட்டில் நடந்தது.

வீட்டில் இருந்த திரு.யாங் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தம் கேட்டதாகக் கூறினார்.

வீட்டின் படுக்கையறைக்குச் சென்று பார்த்தபோது, ​​வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததாகவும் படுக்கையில் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்ததாகவும் தெரிவித்தார்.

இதனால் ஜன்னலுக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையின் பாதுகாப்பு குறித்து திரு.யாங் கவலை தெரிவித்தார்.

நல்ல வேலையாக இச்சம்பவம் நடைபெற்ற போது அவரது மகள் பள்ளியில் இருந்துள்ளார்.

தான் தங்கியிருந்த புளோக்கைச் சுற்றி நிறைய கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் ஏதாவது விழுந்திருக்கக் கூடம் என்ற அச்சத்தில் அவர் வீட்டின் அனைத்து பக்கங்களையும் ஆராய்ந்ததாகத் தெரிவித்தார்.

திரு.யாங் உடனடியாக தஞ்சோங் பாகார் நகர சபையைத் தொடர்பு கொண்டார்.

நகர சபை கட்டுமானத்தை நடத்தும் குத்தகைதாரரை தொடர்பு கொள்ளுமாறு கூறியது.

உடனடியாக விரைந்த அவர்,அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டு இருந்த குத்தகையாளரின் தொலைபேசி எண்ணைப் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

புளோக்கின் வெளிப்புறச் சுவர்களில் வர்ணம் பூசும் பணி ஒரு மாதமாக நடைபெற்று வருவதாக திரு.யாங் கூறினார்.

ஒரு ஊழியர் பணியின் போது தவறுதலாக கம்பியை ஜன்னல் மீது வீசியதால் ஜன்னல் உடைந்து நொறுங்கியது என்று குத்தகைதாரர் திரு.யாங்கிடம் கூறினார்.

தற்போது அவரது பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உடைந்த ஜன்னல் மாற்றப்பட்டுள்ளது.