பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!!

பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!!

மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு iphone 16 கைபேசிகளை பரிசாக வழங்கிய முதலாளிகளை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

மலேசியாவின் ஜெஃப் லியோங் மற்றும் இந்திரா களஞ்சியம் என்ற தம்பதியினர் பணிப்பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர்.

தம்பதியரின் குழந்தைகளை பராமரித்து வரும் பணிப்பெண்கள் பரிசினை கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவதைக் காணொளியில் காணலாம்.

ஒவ்வொரு வருடமும் புதிய மொபைல் போன் வாங்கும் பழக்கம் தம்பதியருக்கு இருப்பது வழக்கம்.

இப்படி ஒவ்வொரு வருடமும் செல்போன் வாங்குவதற்கு என்ன தேவை என்பது போல் பணிப்பெண்கள் கேட்பது உண்டு.

புதிய மொபைல் போன் வாங்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தம்பதியினர் தெரிவித்தனர்.

இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

இணையவாசிகள் பலரும் இந்த ஜோடியை பாராட்டி வருகின்றனர்.

பணிப்பெண்களின் மகிழ்ச்சியைக் கண்டு தாங்களும் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு சில நெட்டிசன்கள் பணிப்பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க iPhone போன்ற விலையுயர்ந்த பரிசு தேவையில்லை.அவ்வபோது அவர்கள் செய்யும் உதவிக்கு பாராட்டி நன்றியை தெரிவித்தாலே போதுமானது என்று கருத்து தெரிவித்தனர்.