சிங்கப்பூரின் பல குரல் மன்னன் சிவாஜி அசோகன் காலமானார்…!!!

சிங்கப்பூரின் பல குரல் மன்னன் சிவாஜி அசோகன் காலமானார்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல உள்ளூர் கலைஞர் சிவாஜி அசோகன் சனிக்கிழமை (அக்டோபர் 12) காலமானார்.

அவருக்கு 55 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.

மறைந்த பிரபல நடிகர்கள் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா போன்றோரை போல் பேசவும் நடிக்கவும் திறமை பெற்றவர்.

சிங்கப்பூரின் பல குரல் மன்னன் சிவாஜி அசோகன் மறைவிற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது மேடையிலேயே மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவரை மீட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவாஜி அசோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.