விமானங்களில் தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்த தடை விதித்த ஈரான்…!!

விமானங்களில் தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்த தடை விதித்த ஈரான்...!!

ஈரான் அனைத்து விமான நிறுவனங்களிலும் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு லெபனானில் இத்தகைய சாதனங்கள் திடீரென வெடித்தது.

இச்சம்பவத்தில் சுமார் 3,000 பேர் காயமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து விமானத்தில் இத்தகைய சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக கூறப்படுகிறது.

மொபைல் போன் தவிர வேறு எந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் விமானத்தில் அனுமதிக்கப்படாது என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளைப் பயன்படுத்த தடை விதித்தது.

ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.