சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தொடக்க நிலை குழந்தைகளின் கல்வியாளர்களுக்கு வேலையில் கூடுதல் மேம்பாட்டு வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.சமூக மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் இந்த புதிய தகவலை பகிர்ந்து கொண்டது.
கல்வித்துறையின் தரத்தை உயர்த்த மூன்று புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புதிய கற்பித்தல் முறை மூலம் ஆசிரியர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.ஆசிரியர்கள் குழந்தைகளுடன் நன்றாகப் பழகுகிறார்களா என்பதைக் கணிக்க உதவும்.
இளநிலை ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்கள் வழிகாட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கல்வியின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களுக்கு அதிக வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தால் ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு குழந்தைகளுக்கு மேலும் சிறப்பான மற்றும் ஆக்கபூர்வமான கல்வியை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.