திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!!

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!!

திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று(அக்டோபர் 11) சுமார் மாலை 5.40 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.

ஷார்ஜா நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதனைக் கண்டறிந்து விமானி துரிதமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கு நோக்கி திருப்பினார்.

விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் தானாக உள்நோக்கி செல்லாததால் சிக்கல் ஏற்பட்டது.

விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர்.

விமான ஓடுபாதையில் தரையிறக்க சிக்கல் ஏற்பட்டதால் வானில் வட்டமடித்து விமானத்தின் எரிபொருள் குறைந்த பின் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 26 முறை வானில் வட்டமிட்டது.

விமானம் தரையிறங்குவதற்கு முன் விமான நிலையத்தில் 20 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் வானில் வட்டமிட்டது.சுமார் 8.15 மணியளவில் தரையிறக்க திட்டமிடப்பட்டது.

திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம் சுமார் 8.15 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

141 பயணிகளுடன் பத்திரமாக விமானம் தரையிறக்கியது. விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி டேனியல் பெலசோ மற்றும் குழுவினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி டேனியல் பெலசோக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.