Eatigo நிறுவனத்திற்கு 62,400 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.நிறுவனம் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இணைய உரையாடல் தளத்தில் சுமார் 2.8 மில்லியன் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்கள் அடங்கிய தரவு தொகுப்பை விற்பனைக்கு விடப்பட்டது.
தரவு தொகுப்பில் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள்,மறையாக்கம் செய்யப்பட்ட கடவுச் சொல் (Hidden Password),Facebook தகவல்கள் முதலியவை இருந்தன.
தனிநபர் தகவல்களை பாதுகாக்க தவறியதற்காக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தீர்ப்பளித்தது.
2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தரவுகள் வெளியானது.நிறுவனம் அடிப்படைத் தரவு பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்தவில்லை என்றும் கூறியது.