அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என புளோரிடா வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீட்பு படையினர் படகு மூலம் சிலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.அப்பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.இதனால் சுமார் மூன்று மில்லியன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளன.
வரும் நாட்களில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ் கூறுகிறார்.
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
சூறாவளியால் அப்பகுதியில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.மேலும் விளையாட்டு மைதானத்தின் மேற்கூரை சூறாவளியால் பறந்து விட்டது.
பலத்த சேதத்தை ஏற்படுத்திய மில்டன் புயல் தற்போது அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.