சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!!

இனி விசா இல்லாமல் இந்தோனேஷியாவின் பிந்தான், பாத்தாம் மற்றும் கரிமுன் தீவுகளுக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் பயணம் செய்யலாம்.

புதிய விதிமுறைகளின்படி அவர்கள் 4 நாட்கள் வரை தங்கலாம் என்று இந்தோனேஷியாவின் குடிநுழைவு அமைப்பின் இயக்குநர் சில்மி கரிம் தெரிவித்தார்.

இப்பகுதியின் பொருளாதாரப் பகுதிகளில் சுற்றுலா மற்றும் முதலீட்டை அதிகரிக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் இந்தோனேஷியாவில் பயணம் செய்வதற்கான உரிமை BVK என்று அழைக்கப்படுகிறது.

விசா இல்லாமல் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் குறுகிய கால பயணங்களை மேற்கொள்வதை எளிதாக்கும் என்று கூறப்பட்டது.

புதிய திட்டம் நடைமுறையில் இருந்தாலும் பாதுகாப்பு அச்சுறுதல்களைத் தவிர்க்க நாட்டிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கவனமாக சோதனை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.