சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் தனது 69 வயதில் காலமானார்!!

சிங்கப்பூர்:பிரதம மந்திரி லீ குவான் யூவின் மகளான டாக்டர் லீ வெய் லிங் அரிய வகை மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 69 வயதில் காலமானார். அவரது மரணத்தை அவரது இளைய சகோதரர் லீ சியென் யாங் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 5.50 மணிக்கு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையான டாக்டர் லீ, மூத்த அமைச்சர் லீ சியென் லூங்கின் சகோதரியும் ஆவார்.

2004 முதல் 2014 வரை நரம்பியல் நிபுணரான டாக்டர் லீ,நேஷனல் நியூரோ சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் இயக்குனராக இருந்தார்.

அவருக்கு 2020 இல் சூப்பர் நியூக்ளியர் பால்ஸி இருப்பது கண்டறியப்பட்டது.இந்த நோயானது உடல் இயக்கங்கள், நடைபயிற்சி, சமநிலை மற்றும் கண் அசைவுகள் போன்றவற்றை பாதிக்கும்.

இறுதியில் விழுங்குவது கூட சிரமமாக இருக்கும்.

மேலும் நிமோனியா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.இந்நிலையில் அவரது இறப்பிற்கு அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.