சையட் அல்வி ரோட்டில் திடீரென இடிந்து விழுந்த இருகடைகள்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சையட் அல்வி சாலையில் 84 மற்றும் 85 எண் கொண்ட இரண்டு அடுக்கு கடைகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக கூறியுள்ளது.

கடை எண் 84 இன் இரண்டாவது மாடியில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்கட்டு அடைக்கப்பட்டதால் அவரால் வெளியே வர முடியவில்லை.இடிபாடுகளில் மேலும் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியது.

இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை.மீட்கப்பட்டவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg